ஓவர் பில்டப்பா இருக்கு, இது வேண்டாம்; ஷூட்டிங் முடிந்து பாடலை ரிஜக்ட் செய்த விஜய்: வரிகள் மாறி வந்த பாடல் சூப்பர் ஹிட்

தளபதி விஜய் நடிப்பில் தான் இயக்கிய 3-வது படமான பகவதி படத்தில் ஒரு பாடலை ரெக்கார்டு செய்து முடித்த பிறகு, அந்த பாடல் ஓவர் பில்டப்பாக இருக்கிறது வேண்டாம் என்று விஜய் மறுத்துள்ளார். அதன்பிறகு அந்த பாடல் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

1996-ம் ஆண்டு சரத்குமார் சுகன்யா நடிப்பில் வெளியான படம் மகாபிரபு. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஏ.வெங்கடேஷ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடிப்பில் செல்வா, நிலவே வா என இரு படங்களை இயக்கிய இவர், சிவாஜி நடிப்பில் வெளியாக கடைசி படமாக பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தை இயக்கியிருந்தார். 

விஜய், சிம்பு, பிரஷாந்த், சரத்குமார், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏ.வெங்கடேஷ், கடைசியாக 2024-ம் ஆண்டு தில் ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். 1996-ம் ஆண்டு முதல் பல படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த வெங்கடேஷ், 2010-ம் ஆண்டு வெளியாக அங்காடித்தெரு படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு தனுஷின் அசுரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

தனது 2-வது படமாக விஜய் நடிப்பில் செல்வா என்ற படத்தை இயக்கிய வெங்கடேஷ் அடுத்து நிலவே வா என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இந்த இரு படமும் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. 1998-ம் ஆண்டு நிலவே வா படம் வெளியான நிலையில், 2002-ம் ஆண்டு இந்த கூட்டணியில் பகவதி என்ற படம் வெளியானது. விஜய் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வர முக்கிய காரணமாக இருந்த இந்த படத்தில் ரீமாசென் நாயகியாக நடித்திருந்தார். 

மேலும், ஆஷித் வித்யார்த்தி, வடிவேலு, யுகேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, தேவா இசையமைத்திருந்தார். பா.விஜய், சினேகன், முத்துகுமார் வாலி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். நடிகர் ஜெய் இந்த படத்தில் விஜயின் தம்பியா நடித்திருந்தார், கதை முழுவதுமே இவரது கேரக்டரை சுற்றியே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். முதல் பாதியில் காமெடி 2-வது பாதியில் ஆக்ஷன் என அமைந்த இந்த படத்தில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்ட பிறகும், விஜய் வேண்டாம் என்று கூறியுள்ளார். 

படத்தில் சினேகன் எழுதிய அச்சமில்லை அச்சமில்லை மனமே என்ற பாடல் இன்றைக்கும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த பாடல் முதலில் சிங்கம் ஒன்று சிங்கம் ஒன்று வருதே என்று தான் எழுதப்பட்டுள்ளது, இந்த பாடல் பதிவு செய்யப்பட்டு, ஷுட்டிங் போகும்போது விஜய் கடைசி வரை இந்த பாடல் வேண்டாம் என்று மறுத்துள்ளார். அதன்பிறகு அச்சமில்லை அச்சமில்லை மனமே என்று பாடலை மாற்றி பதிவு செய்துள்ளனர். இது குறித்து இயக்குனர் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Source link