செம குட் நியூஸ்..!! இனி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி..!! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழகத்தில் உள்ள சுமார் 37,595 அரசுப் பள்ளிகளில் பயிலும் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மதிய உணவுத் திட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

தற்போதைய சூழலில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இலவச மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்களுடன் தினமும் முட்டையும் (முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம்) வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில், மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. சென்னையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர், மதிய உணவில் சிக்கன் பிரியாணி சேர்ப்பது தொடர்பாக பல்வேறு தரப்பிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த இறுதி முடிவை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த ‘சிக்கன் பிரியாணி’ குறித்த அறிவிப்பு இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகக் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! இடி, மின்னலுடன் ஊற்றப்போகும் கனமழை..!! லிஸ்ட்டில் எந்தெந்த ஊர்..?

Source link