ஜீவன்-ராம்குமார் ஜோடி அபாரம்: ஐ.டி.எப்., டென்னிசில் சாம்பியன்

மும்பை: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பையில், ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஜோடி, சுவீடனின் லியோ போர்க், உக்ரைனின் யூரி ஜாவாகியன் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய ஜீவன், ராம்குமார் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சித்தார்த் ரவாத், பிரான்சின் புளோரன்ட் பாக்ஸ் மோதினர். இதில் சித்தார்த் ரவாத் 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதில், ஆஸ்திரேலியாவின் பிலிப் செகுலிக்கை சந்திக்கிறார்.

Source link