‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழக்கம் புதிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நம் நாட்டின் தேசிய பாடலான “வந்தே மாதரம்” இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் அரசு நிகழ்ச்சிகளில் மத்திய அரசு பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.அரசு நிகழ்ச்சிகள் துவக்கத்திலும், இறுதியிலும் தேசிய பாடலான வந்தே மாதரம், தேசிய கீதமான ஜன கண மன பாடல் பாட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
‘வந்தே மாதரம்’ பாடப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், இந்தப் புதிய விதிமுறை குறிப்பிடுகிறது. 3.10 நிமிடங்கள் கொண்ட 6 சரணங்களையும் முழுமையாக பாட வேண்டும்.நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா, ஆளுநர், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரின் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் ‘வந்தே மாதரம்’ ஒலிக்கப்பட வேண்டும். திரையரங்குகள் போன்ற பொது இடங்களிலும் இந்த பாடல் ஒலிக்கப்படும். இருப்பினும் அங்கு பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயமில்லை.
