புதுடில்லி: வினாத்தாள் கசிவு என்பதை ஒழிப்பதே மசோதாவுக்கு முக்கிய நோக்கம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
லோக்சபாவில் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேறிய விவரத்தை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டு உள்ளார்.
அந்த பதிவில் அவர் மேலும் கூறி உள்ளதாவது;
பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் சட்ட கட்டமைப்பை உருவாக்க பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா 2026 லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடும் தண்டனைகள், தேர்வு மோசடிகள் மீது தீவிர நடவடிக்கைகள் வழியாக வினாத்தாள் கசிவு முறைகேடுகள் ஒழிக்கப்படும்.
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உச்சபட்ச நேர்மையை மேலும் கடைபிடிப்பதே இந்த மசோதா நோக்கமாக கொண்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டு உள்ளார்.
