கர்நாடகா மாநிலத்தில் சுமார் 2,60,000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனாலும் அதில் 2,05,000 பேர் மட்டுமே இதற்கான உரிய சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். சுமார் 54,000 பேருக்கும் மேல் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். கர்நாடக சுகாதாரத்துறை மற்றும் தேசிய சுகாதாரக் துறைக்கு விடப்பட்ட சவாலாக இருக்கிறது. இந்த தகவலை மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கம் உறுதி செய்துள்ளது.
தற்போது கர்நாடகா முழுக்க இளம் வயதினருக்கு ஹெச்ஐவி தொற்று அதிகம் பரவி வருகிறது. பெரும்பாலும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம் இத்தொற்று அதிகரித்து வருவது மாநில சுகாதாரத் துறைக்கே பெரிய தலைவலியாக இருக்கிறது.
சில தரவுகளின் அடிப்படையில் இந்த வயதினரிடையே பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 44,500 ஆக இருந்தது. தற்போது 2025-26 ஆம் ஆண்டில் 66,600 ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையைக் கண்டு மாநில அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
