கட்சி நிர்வாகிகளுக்கு திமுக எம்எல்ஏ கார் பரிசளிப்பு: தேர்தல் அதிகாரியின் நோட்டீஸுக்கு விளக்கம்

திருச்சி: தேர்​தல் விதி​முறை​கள் அமலில் உள்ள போது, கட்சி நிர்​வாகி​கள் 7 பேருக்கு சொகுசு கார்​கள் பரிசளித்த விவ​காரம் தொடர்​பாக தேர்​தல் அலு​வலர் அனுப்​பிய விளக்க நோட்​டீஸுக்கு மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்​எல்ஏ பதில் அளித்​துள்​ளார்.

திருச்சி மாவட்​டம் மண்​ணச்​சநல்​லூர் தொகுதி திமுக எம்​எல்ஏ கதிர​வன். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலும் திமுக சார்​பில் போட்​டி​யிட விருப்ப மனு அளித்​துள்​ளார். இந்​நிலை​யில், திமுக ஒன்​றியச் செய​லா​ளர்​கள் 5 பேர், பேரூ​ராட்சி செய​லா​ளர்​கள் 2 பேர் என 7 பேருக்கு ரூ.15 லட்​சம் மதிப்​பிலான காரை தனது தந்தை அண்மை​யில் பரிசளித்​துள்​ளதாக எம்​எல்ஏ கதிரவன் சமூகவலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டிருந்​தார். அதில்,கட்சி பதவி​களை குறிப்​பி​டா​மல், அவர்​களது பெயர்​களை மட்​டும் குறிப்​பிட்​டிருந்​தார்.

Source link