வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை: கோவை ஐய்யப்பன் கோவிலில் நடிகர் ராம் சரண் சாமி தரிசனம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம் சரண். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பெத்தி. இந்தப் படத்திற்கான சண்டை காட்சியில் நடித்தபோது ராம் சரணின் கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராம்சரணுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஐய்யப்பன் கோவிலில் தரிசனம்

இந்நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் நடிகர் ராம்சரண் இன்று புதன்கிழமை கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ராம்சரணுடன் அவரது மனைவி உபாசனாவும் அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில், கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடிகர் ராம்சரண் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Source link