பொதுப்பணித்துறை சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை: ‘பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை, பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

‘கலந்தாய்வு வழியே பணியிட மாறுதல் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில், 50 சதவீதம் நியமனம் செய்ய வேண்டும்’ என்பது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர்கள் சங்கத்தினர், நேற்று முன்தினம் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

Source link