மேலும், முதல் முறையாக எது ‘ஆவணம்’ மற்றும் எது ‘பார்சல்’ என்பதற்கான தெளிவான வரையறைகளையும் அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தேவையற்ற கூடுதல் கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்படும்.
இந்த புதிய கட்டண நடைமுறை வருகிற ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய விதிகளின படி, எவ்வித மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள் அல்லது வணிக மதிப்பும் இல்லாத பொருட்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ‘ஆவணங்கள்’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டு, குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படலாம்.
வணிகப்பெருட்கள் மற்றும் மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் சேர்க்கப்படும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனுப்பும் வெல்கம் கிட்கள், பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், வங்கி கணக்கு அறிக்கை, வங்கி அறிக்கை நகல்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், அரசு வழங்கிய அடையாள ஆவணங்களான பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் ‘ஆவணம்’ பிரிவில் இடம்பெறும்.
