ஒரு வேலை.. 80 பேர் போட்டி! ஒப்பந்த பல் மருத்துவர் பணி; கலெக்டர் ஆபீசில் நேர்காணல்

திருப்பூர்: ஒரே ஒரு ஒப்பந்த பல் மருத்துவர் பணியிடக்காக நடந்த நேர்காணலில், 80 பேர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல் மருத்துவர் நியமிப்பதற்கான நேர்காணல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட நலச்சங்கத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்காக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. ஒரே ஒரு பல் மருத்துவர் பணியிடமே நிரப்பப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய நேர்காணலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பல் மருத்துவம் படித்த இளம் மருத்துவர்கள், 80 பேர் பங்கேற்றனர்.

அரங்கம் நிறைய அமர்ந்திருத்த மருத்துவர்கள், ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். அவர்களின் கல்விச்சான்று விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. தகுதியான ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பல் மருத்துவராக நியமிக்கப்படுவார் என, நேர்காணல் நடத்திய அலுவலர்கள் தெரிவித்தனர்.

Source link