புதுடில்லி: நாடு முழுதும் 57.80 கோடி ‘ஜன் தன்’ கணக்குகளில், கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லி.,யில் இதுகுறித்து தெரிவித்ததாவது:
நம் நாட்டில், 57.80 கோடி பேர் பி.எம். ஜன் தன் கணக்குகளை பயன்படுத்துகின்றனர். அவற்றில் 2.94 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த கணக்குதாரர் எண்ணிக்கையில் பெண்களின் பங்கு 55 சதவீதத்துக்கும் மேல் ஆகும். அதேபோல, 78 சதவீதம் பேர் ஊரக, சிறு நகர பகுதிகளில் வாழ்பவர்கள். ஜன் தன் வாடிக்கையாளர்களுக்கு 39.48 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
