பாலக்காடு: பாலக்காட்டில், 100 கிராம் போதை மாத்திரையுடன் இருவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு

பாலக்காடு: பாலக்காட்டில், 100 கிராம் போதை மாத்திரையுடன் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு டவுன் தெற்கு எஸ்.ஐ., சவுமியா தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் இருந்து கொச்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சில், பயணிகளிடம் நடத்திய சோதனையிட்டனர்.

அதில், திருவனந்தபுரம் மாவட்டம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்த சாயா பேகம், 22, பாலக்காடு மாவட்டம் அம்பலப்பாறை பகுதியைச் சேர்ந்த முகமது ஷாஹித், 24, ஆகியோரின் பையில், நான்கு லட்சம் மதிப்புள்ள, 100 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணையில், போதை மாத்திரையை பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. போதை மாத்திரையை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Source link