ராகுல் – -பிரியங்கா சண்டை பின்னணி

புதுடில்லி: தமிழகத்துடன் அசாம் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. தற்போது அங்கு, முதல் வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அசாமில், 10 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சியில் உள்ளது. ஆட்சியை தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் முதல்வர் சர்மா.

பா.ஜ.,வின் முக்கிய எதிரி காங்கிரஸ். இந்த கட்சியிலிருந்து முக்கிய தலைவர்களை, பா.ஜ., பக்கம் அழைத்து வருகிறார் முதல்வர் சர்மா. இது, காங்கிரசில் குறிப்பாக பிரியங்காவிற்கு பின்னடவை ஏற் படுத்தியுள் ளது. அசாமின் காங்., வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார வியூகங்களை கவனித்து வருகிறார் பிரியங்கா. எப்படியாவது காங்கிரசை ஆட்சியில் அமர வைக்கும் குறிக்கோளுடன் இறங்கி உள்ளார். ஆனால், இவருக்கு இடி மேல் இடியாக இரண்டு சம்பவங்கள் இறங்கி உள்ளன.

அசாம் காங்., – எம்.பி., பிரதியுத் பொர்தோலி, கட்சியிலிருந்தும் எம்.பி., பதவியில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டார். இவர் பா.ஜ.,வில் சேர்ந்துள்ளதோடு, திஸ்பூர் சட்டசபை தொகுதியிலிருந்து பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறாராம். இவரது மகன் பிரதீக் மார்கரெட்டா, அத்தொகுதியின் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தந்தை பா.ஜ.,வில் சேர்ந்ததை அடுத்து, இவர், ‘நான் போட்டியிடப் போவதில்லை’ என அறிவித்து விட்டார்.

இன்னொரு பக்கம், அசாம் காங்., முன்னாள் துணை த லைவர் திவ்யஜோதி தாலுக்தாரும் பா.ஜ.,வில் இணைந்து விட்டார். தன் தலைமையில் உள்ள மாநிலத்தில் இப்படி நடக்கிறதே என்ற ஆதங்கம் பிரியங்காவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் ராகுலோ, இது குறித்து கவலைப்படவில்லை. ‘யார் யார் காங்கிரசிலிருந்து போகின்றனரோ போகட்டும்; மக்கள் நம் பக்கம் தான்’ என்கிறாராம் அவர்.

‘எப்போதுமே தேர்தல் நேரத்தில் காங்., தலைவர்களை பணம் கொடுத்து, தன் பக்கம் கொண்டு வருவார் அமித் ஷா. அது தான் அவரது வழக்கம். இப்படி தான் பா.ஜ.,வினர் அனைத் து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கின்றனர்’ என குற்றம் சாட்டுகின்றனர் காங்., தலைவர்கள். இதில் சுவாரசியம் என்னவென்றால், தற்போது முதல்வராக உள்ள ஹிமந்த பிஸ்வ சர்மாவும் காங்கிரசிலிருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர் தான்.

Source link