‘பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் என இரண்டிலுமே ஒரே நேரத்தில் சரிவு ஏற்படும் தற்போதைய சூழலில், முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவை காக்கும் சிறந்த முதலீடாக தங்கம் உருவெடுத்துள்ளது’ என, ‘உலக தங்க கவுன்சில்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
முக்கிய அம்சங்கள்
கடந்த 19 ஆண்டுகால தரவுகளின்படி, போர்ட்போலியோவில் 7.5% – 15% தங்கத்தை வைத்திருந்தால் சந்தை வீழ்ச்சியில் பாதிப்பு குறையும்
தங்கம் டாலரில் வர்த்தகம் செய்யப்படுவதால், ரூபாய் மதிப்பு குறையும்போது இந்தியாவில் விலை அதிகரிக்கும்; இரட்டிப்பு லாப கிடைக்க வாய்ப்பு
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் போன்ற நிச்சயமற்ற சூழலில் தங்கம் பாதுகாப்பான முதலீடு
கச்சா எண்ணெய் உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கிறது; அப்போது பண மதிப்பு குறையும். ஆனால், பணவீக்கத்தை தாண்டி தங்கம் மதிப்பு உயரும்
அண்மை காலங்களில், நீண்டகால அடிப்படையில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களைவிட தங்கம், சிறந்த வருவாய் வழங்கியுள்ளது.
ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும்! தற்போதைய அரசியல் பதற்றங்கள் மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு மத்தியில், ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை தங்கத்தில் வைத்திருப்பது அவசியம். இது போர்ட்போலி யோ வின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும். – கவிதா சாக்கோ, இந்திய ஆராய்ச்சி தலைவர், உலக தங்க கவுன்சில்.
