தமிழக அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

இதனால், தமிழகம் முழுவதும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பவாத பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “வெயில் காலத்தில் வெப்பவாதம், உட லில் நீர்ச்சத்து குறைதல். மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற் படும். அத்தகைய பாதிப்புகள் ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையங்களில் 2 படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும். மருந்துகள், தடுப்பூசிகள் குறைந்த தட்ப வெப்ப நிலையில் சேமிப்பதற்கான குளிர் சாதனக் கட்டமைப்புகள் போன்றவற்றை முறையாகப் பராமரிக்க வேண் டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

Source link