அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது. அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான்.
ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது. ‘போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான். நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்’ (விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்) அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது. நான் ஆசியாவின் பக்கம். வாழ்க இந்தியா” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டு, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
