ரஷ்ய கச்சா எண்ணெய் உடன் மங்களூரு துறைமுகம் வந்து சேர்ந்தது ‘அக்வா டைட்டன்’ சரக்கு கப்பல்!

மங்களூரு: ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது. இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் உடன் மங்களூரு துறைமுகம் வந்து சேர்ந்துள்ளது ‘அக்வா டைட்டன்’ என்ற சரக்கு கப்பல். இதை இந்தியா பெற்றது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

‘அக்வா டைட்டன்’ என்ற சரக்கு கப்பல் கச்சா எண்ணெய் உடன் சீனாவுக்கு சென்று கொண்டிருந்தது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் விலக்கு அறிவித்தது அமெரிக்கா. அதன் பின்னர் இது சாத்தியமாகி உள்ளது. அமெரிக்காவின் அனுமதியை அடுத்து கடலில் இருந்த இந்த கப்பல் இந்தியா நோக்கி தனது ஓட்டத்தை திசை திருப்பியது.

Source link