'என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.!' – பாஜகவுக்கு கெடு விதித்த சரத்குமார்

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து பேசினர்.

சரத்குமார்
சரத்குமார்

ஆதரவாளர்கள் மத்தியில் சரத்குமார் பேசியவை, ‘உங்களின் ஆதங்கத்தையெல்லாம் மனதில் வைத்திருக்கிறேன். எடுக்கிற முடிவு எல்லாருக்கும் சாதகமாக இருக்க வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்தோம் என்று இருக்கக்கூடாது.

கட்சியினரான நீங்கள்தான் என் குடும்பத்தினர். ‘இப்போதும் பாருங்கள். இரவில் மனைவியிடம் கேட்டு ஒரு முடிவெடுப்பார்’ என கிண்டலடிக்கிறார்கள். அவர்களெல்லாம் முட்டாள்கள்.

என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் யாருக்கும் பயந்தவன் கிடையாது.

நம் கட்சி சார்பில் முன்னோடிகள் பாஜக மாநிலத் தலைவரிடம் கடிதம் கொடுத்து கோரிக்கை வையுங்கள். கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் என்ன செய்வதென பார்ப்போம்.

நம் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய நீரோட்டத்தில் இணைந்தேன். அண்ணாமலை, நயினார் நாகேந்திரனிடம் நாம் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்.

SarathKumar
SarathKumar

அவர்களுக்கு எதோ தடங்கல் இருக்கிறது. ஆனால், இதற்கு மேல் தாமதப்படுத்தினால் நன்றாக இருக்காது. அத்தனை தகுதியும் உடைய எனக்கு ஏன் அங்கீகாரம் இல்லை? என்னுடைய மனைவி அறிவு, திறமை, ஆற்றல் மிக்கவர். திமுகவுக்காக பிரசாரம் செய்தவர். அப்படிப்பட்டவரிடம் கருத்து கேட்காமல் யாரிடம் கேட்பது? சமூகவலைதளங்களில் தற்குறிகளாக இருக்கிறார்கள். 41 பேரை கொன்றுவிட்டு அவர்களின் வீட்டாரை ஹோட்டலுக்கு அழைத்து துக்கம் விசாரித்த கூட்டம் இது.

நம்முடைய கோரிக்கையை பாஜகவுக்கு தெரியப்படுத்துவோம். அதன்பிறகு முடிவெடுப்போம்.’ என்றார்.

Source link