டெஹ்ரான்:
ஈராக் விமான நிலையம் அருகே அமெரிக்க தலங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான மோதல்களால் ஈராக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாக்தாத் மற்றும் அர்பிலில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் தூதரகம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன.
அந்தவகையில், பாக்தாத் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில ராக்கெட்டுகள் அமெரிக்க தளத்திற்கு அருகில் விழுந்ததாக அதிகாரிகள் செய்தி நிறுவனத்திடம் கூறினர். போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் நாடு தழுவிய இணைய முடக்கம் 23வது நாளாகத் தொடர்கிறது.
