ஜெருசலேம்: உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் நாடு ஈரான் என்பதால், தற்போதைய போரில் இணையுமாறு உலக நாடுகளுக்கு

ஜெருசலேம்: உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் நாடு ஈரான் என்பதால், தற்போதைய போரில் இணையுமாறு உலக நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆராத் என்ற பகுதியை நேரில் பார்வையிட்ட போது அவர் கூறியதாவது; ஈரான் ஒட்டுமொத்த உலகிற்கே ஆபத்து என்பதை கடந்த 48 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகள் தான் சாட்சி. அவர்கள் (ஈரான்) மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இதில், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது அதிர்ஷ்டம் தான். ஆனால், பொதுமக்களை கொல்வது தான் ஈரானின் எண்ணமாக இருக்கிறது.

அதேபோல, ஜெருசலேம் மேற்குச்சுவர் எனப்படும் அழுகைச்சுவர், திருக்கல்லறை தேவாலயம் மற்றும் அல்-அக்ஸா மசூதி போன்ற 3 மதத் தலங்களுக்கு அருகே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவை சேதமடையவில்லை.

சர்வதேச நீர்வழி போக்குவரத்து மற்றும் எரிசக்தி வழித்தடங்களை தடுத்து நிறுத்தி, ஒட்டுமொத்த உலகையும் ஈரான் மிரட்டி வருகிறது. உலகையே அச்சுறுத்தும் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள சர்வதேச அளவிலான கூட்டு நடவடிக்கைக்கான அழைப்பை நான் வரவேற்கிறேன். இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒட்டுமொத்த உலகிற்காகவும் இணைந்து போரில் ஈடுபட்டு வருகிறது. மற்ற நாடுகளும் இதில் இணைய வேண்டிய நேரம் இது, இவ்வாறு அவர் கூறினார்.

Source link