குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொடங்கி தற்போது பிரதமராக பதவி வகிக்கும் காலம் வரை இந்த சாதனையில் அடங்கும். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மே 21, 2014 வரை சுமார் 13 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார்.
அதன்பின், 2014-ம் ஆண்டு மே 26 அன்று இந்தியாவின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம், சுமார் 25 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
