வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 4வது ‘டி-20’ போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. வெலிங்டனில் 4வது போட்டி நடந்தது.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜார்ஜி (23), தியான் (19), ஜேசன் ஸ்மித் (19) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கானர் எஸ்தர்ஹியுசன் (57) அரைசதம் கடந்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 164/5 ரன் எடுத்தது. ரூபின் ஹெர்மன் (28), ஜார்ஜ் லிண்டே (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் (32), டேன் கிளீவர் (26), நிக் கெல்லி (19) நம்பிக்கை தந்தனர். பெவன் ஜேக்கப்ஸ் (3), கேப்டன் ஜேம்ஸ் நீஷம் (6), கோல் மெக்கோன்சி (10), ஜோஷ் கிளார்க்சன் (10) சோபிக்கவில்லை. நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் 145 ரன்னுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை எஸ்தர்ஹியுசன் வென்றார்.
தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது.
