மும்பை: உலகம் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறி வரும் சூழலில், மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த நபர்,

மும்பை: உலகம் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறி வரும் சூழலில், மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த நபர், வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார்.

‘உங்கள் பிரச்னைகளை கூறுங்கள்; உங்களுடன் சேர்ந்து அழுவதற்கு, 1,000 ரூபாய் கட்டணம்’ என விளம்பரம் செய்து சம்பாதித்து வருகிறார்.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பிருத்விராஜ் போரா என்பவர், மும்பை கடற்கரையில் ஒரு விளம்பர பலகையை வைத்தபடி அமர்ந்திருக்கிறார். அந்த விளம்பர பலகையில், ‘உங்கள் கவலைகளை என்னுடன் பகிரலாம்; கேட்க தயாராக இருக்கிறேன். சிறிய பிரச்னைகளுக்கு 250 ரூபாய்; பெரிய பிரச்னைகளுக்கு 500 ரூபாய். உங்களுடன் சேர்ந்து அழுவதற்கு, 1,000 ரூபாய் கட்டணம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை எடுத்த நபர், ‘உண்மையிலேயே யாராவது உங்களிடம் வருகின்றனரா’ என, பிருத்விராஜ் போராவிடம் கேட்டார்.

பதிலளித்த அவர், ‘ஆம். பலர் என்னை அணுகுகின்றனர். வாழ்க்கையில் பல பிரச்னைகளை பார்த்தவன் நான்; அதனால் தீர்வு அளிப்பதில் கைதேர்ந்தவன்’ என்றார்.

இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பிருத்விராஜ் போரா-வின் இந்த தனித்துவமான முயற்சியை பலர் பாராட்டினாலும், சிலர் இது நகர்ப்புற வாழ்க்கையில் பெருகி வரும் தனிமை மற்றும் முறையான மனநல உதவி கிடைக்காத சூழலின் வெளிப்பாடு என கவலை தெரிவித்துள்ளனர்.

Source link