மும்பை: கிளாசிக் ஸ்னுாக்கரில் பஞ்சாப் வீரர் திக்விஜய் சாம்பியன் பட்டம் வென்றார்.
மும்பையில், சி.சி.ஐ., கிளாசிக் ஸ்னுாக்கர் தொடர் நடந்தது. இதன் பைனலில் பஞ்சாப்பின் திக்விஜய் கேடியன், பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணியின் பிரிஜேஷ் தமானி மோதினர்.
இதில் திக்விஜய் 7-1 (55–59, 88-17, 77-1, 83-73, 76-36, 92-0, 62-53) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். திக்விஜய்க்கு, கோப்பையுடன், ரூ. 3.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பிரிஜேஷிற்கு ரூ. 1.75 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
