திருவனந்தபுரம்: இந்தியன் ஓபன் 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் ரமேஷ், வித்யா தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் 7வது இந்தியன் ஓபன் ஓட்டம் நடந்தது. 400 மீ., ஓட்டத்தில் மட்டும் 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான ‘சீனியர்’ பிரிவில் தமிழகத்தின் ராஜேஷ் ரமேஷ் (45.26 வினாடி) தங்கம் கைப்பற்றினார்.
‘சீனியர்’ பெண்களுக்கான பிரிவில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் (53.31 வினாடி) தங்கம் வென்றார். விஜயகுமாரி (53.55, கர்நாடகா), பூவம்மா (55.61, ஓ.என்.ஜி.சி.,) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
20 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் தமிழகத்தின் தாரணி (55.63 வினாடி) வெண்கலம் வசப்படுத்தினார். ரேஷ்மா (54.84, உ.பி.,), இஷா (55.46, மகாராஷ்டிரா) முதல் இரு இடம் பெற்றனர்.
18 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில் தமிழகத்தின் நேத்ரா (59.54 வினாடி) இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளி கிடைத்தது. மொத்தம் 6 பிரிவுகளில் நடந்த போட்டியில் தமிழகத்திற்கு 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் கிடைத்தன.
