சென்னை: உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது தமிழ்ப்புதல்வன் திட்டம் என முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது தமிழ்ப்புதல்வன் திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்புதல்வன் திட்டத்தால் பயனடைந்தவர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தத் தம்பி மட்டுமல்ல, இதுபோல லட்சக்கணக்கான தம்பிகளின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது தமிழ்ப்புதல்வன்.

இவர்களின் கல்வி தொடர, எளிய குடும்பங்களின் அடுத்த தலைமுறைகள் செழிக்க திமுகவுக்கு ஓட்டளிக்க வேண்டும். திராவிட மாடல் ஒன்றாக வெல்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்ப்புதல்வன் திட்டம்

தமிழ்ப்புதல்வன் திட்டம் என்பது 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி படிக்க, கல்லூரி சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும். புதுமைப்பெண் திட்டத்தைப் போன்று, மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைத்து உயர்கல்வியை ஊக்குவிக்க இத்திட்டம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கப்பட்டது.

Source link