வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைவு

சென்னை: சென்னையில் வார தொடக்க நாளான இன்று (மார்ச் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 670 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், கடந்த மாதம் தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர். இதனால், நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியது. இம்மாதம் தங்கம் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு, 330 ரூபாய் குறைந்து, 13,620 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 2,640 ரூபாய் சரிவடைந்து, 1,08,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (மார்ச் 22) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (மார்ச் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 670 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 5 ஆயிரத்துக்கு மேல் சரிவை சந்தித்து இருக்கிறது.

வெள்ளியும் சரிவு

வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் சரிந்து ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வாய்ப்பு குறைவு

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடுகள், தொடர்ந்து கச்சா எண்ணெய் மீது உள்ளது. தற்போது, தங்கத்தின் மீதுள்ள முதலீடுகள் சற்று சரிந்துள்ளன. இந்த சரிவு தற்காலிகமானது. போர் முடிவுக்கு வரும் போது, தங்கம் விலை மிகவும் உயர வாய்ப்புள்ளது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு, என்றார்.

Source link