கவுகாத்தி: அசாம் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால், அமைச்சர் நந்திதா கர்லோசா தனது பதவியை ராஜினாமா செய்து

கவுகாத்தி: அசாம் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால், அமைச்சர் நந்திதா கர்லோசா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் இணைந்தார். மேலும், அவர் ஹாப்லாங் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தற்போது ஆளும் கட்சியான பாஜ மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க முனைப்பில் இருந்து வருகிறது. அதேவேளையில், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம், சுரங்கம் மற்றும் பழங்குடியினர் கலாசாரத் துறை அமைச்சர் நந்திதா கர்லோசா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் இணைந்தார். நடக்கவிருக்கும் தேர்தலில் . வரவிருக்கும் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, ரூபாலி லங்தாசா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவர் பாஜவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார்.

எதிர்வரும் தேர்தலில் ஹாப்லாங் தொகுதியின் வேட்பாளராக அவரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிர்மல் லங்தாசா போட்டியில் இருந்து விலகினார்.

Source link