சென்னை: தொகுதிப்பங்கீடு தொடர்பாக கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல்

சென்னை: தொகுதிப்பங்கீடு தொடர்பாக கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., – புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக, இன்று சென்னை வந்த தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் தொகுதிப்பங்கீடு தொடர்பாக கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜிகே வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன்ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளை விட, கூடுதலாக பெறுவதில் தமிழக பாஜ தீவிரம் காட்டி வருகிறது.

நல்ல பதில் வரும்!

ஆலோசனையில் பங்கேற்ற பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி எண்ணிக்கை குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கூறினேன். தொகுதிகள் குறித்து விரிவாக பேசினேன். விரைவில் நல்ல பதில் வரும். நல்ல முடிவை பியூஷ் கோயல் எடுப்பார் என்று நம்புகிறேன், என்றார்.

Source link