2026-ல் மதுரை கள நிலவரம் என்ன? | Madurai; AIADMK, DMK face off in a close contest; Who will win? What is the situation in Madurai?

முந்துவது யார்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?”

1. மதுரை மத்தி சட்டமன்ற தொகுதி

மதுரையின் பிரதான அடையாளமான மீனாட்சியம்மன் திருக்கோயில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெரியார் பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு, கூடலழகர் பெருமாள் திருக்கோயில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில், பழைமையான காஜிமார் தெரு பள்ளிவாசல், டவுன்ஹால் ரோடு என்று மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்கள் நிறைந்த தொகுதி மதுரை மத்தி. 

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

தொகுதியில் முக்குலத்தோர், நாயக்கர், பட்டியல் சமூகத்தினருடன், இஸ்லாமியர், யாதவர் உள்ளிட்ட சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர்.

தி.மு.க-வில், மீண்டும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கே சீட் என்கிறார்கள். அதேசமயம், வழக்கறிஞர் அன்புநிதி, செயற்குழு உறுப்பினர் தனச்செல்வம், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், முன்னாள் மேயர் குழந்தைவேல் ஆகியோரும் சீட் பெற முயல்கிறார்கள்.

அ.தி.மு.க-வில், பேராசிரியர் ஜெயபாலன், சோலைராஜா மற்றும் சமீபத்தில் கட்சியில் இணைந்த பி.எம் மன்னன் ஆகியோர்  சீட் கேட்கிறார்கள்.

அ.ம.மு.க-வில் டேவிட் அண்ணாதுரை, பா.ஜ.க-வில் ராஜரத்தினம், சசிகுமார் ஆகியோரும் சீட் பெறுவதற்கான ரேஸில் இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் ஹக்கிம் என்பவர் போட்டியிடுகிறார்.

தற்போதைய நிலவரப்படி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் சொந்த செல்வாக்கு, தி.மு.க-வின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றால், தொகுதியில் தி.மு.க-வே முன்னிலை பெற்றிருக்கிறது.

Source link