தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் இப்படத்தில் அரசியல் தொடர்பாகவும், ஒரு கட்சி சார்பான கருத்துகள் அதிகம் வலியுறுத்தப்படுவதாலும் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தேர்தலுக்கு பின் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்தார். இந்த முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, திரைப்படம் வெளியாகி விட்டது, மனுவாக தாக்கல் செய்து விட்டு முறையீடு செய்யும்படி அறிவுறுத்தினர்.
