நமது நிருபர் புதுச்சேரி இண்டி கூட்டணியில் திமுக, காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே

நமது நிருபர்

புதுச்சேரி இண்டி கூட்டணியில் திமுக, காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே இன்னும் தீராத நிலையில், தேமுதிகவும் போட்டியிடும் என்று பிரேமலதா அறிவித்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி நடக்கவுள்ளது. என்ஆர் காங்கிரஸ் – பாஜ இடையே தொகுதி பங்கீடு முடிவாகி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2 லஜக 2 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறும் சூழலிலும் இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் முடிந்தபாடு இல்லை.

நீண்ட இழுபறிக்கு பிறகு இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. காங்கிரஸ் -16, திமுக-12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் தர மறுக்கப்பட்டதாக கூறி, மாநில தலைவர் வைத்திலிங்கம் வீட்டு வாசலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க, திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்திருந்த நிலையில், 2 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இண்டி கூட்டணியில் திமுக, காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே இன்னும் தீராத நிலையில், தேமுதிகவும் போட்டியிடும் என்று பிரேமலதா அறிவித்து இருக்கிறார்.

இந்த முடிவை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை பிறகு பிரேமலதா எடுத்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிடுகிறது. தேமுதிகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தான் புதுச்சேரியில் தேமுதிக போட்டியிட உள்ளது. தேமுதிக சார்பில் யார் போட்டி என்பது மாலை 3 மணிக்கு தெரிய வரும், என்றார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் தர மறுப்பு; மாநில தலைவர் வைத்திலிங்கம் வீட்டு வாசலில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டம் தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Source link