விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள்:
இந்தத் தோல்வி குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மஹ்முதுல்லா, “அந்தப் போட்டியில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது மிகவும் துயரமானது மற்றும் இதயத்தை உடைக்கும் சம்பவம். நாங்கள் மைதானத்திலேயே அழுதோம். ஹோட்டலுக்குச் சென்ற பிறகும் நானும், முஷ்பிகுர் ரஹீமும் விடிய விடிய அழுதோம். இந்தியாவை வீழ்த்தும் மிக நெருக்கமான வாய்ப்பு அது.
மேலும் சிங்கிளாக எடுத்து ரிஸ்க் இல்லாமல் ஆடி வென்றிருக்கலாம். ஆனால் பெரிய ஷாட் அடித்து வெற்றியைத் தேட நினைத்தது ஒரு முட்டாள்தனமான முடிவு” என்றார் மஹமுதுல்லா.
146 ரன்களை வைத்துக் கொண்டு வெல்வதெல்லாம் தோனியினால் மட்டுமே முடியும். அதனால்தான் இந்தப் போட்டியை மறக்க முடியாது. 2016 உலகக்கோப்பையில் இந்த வெற்றியின் மூலம் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்தியா, மும்பையில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது வேறொரு துயரக்கதை.
