சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தற்போது வரை ரூ.151 கோடி மதிப்பிலான பணம்,

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தற்போது வரை ரூ.151 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில், ஏப்., 23ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதை கண்காணிக்க, மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.151 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ரூ.151 கோடி மதிப்பாலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் 794 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

Source link