புதுச்சேரி: `சீட் இல்லை!’ – கை விரித்த காங்கிரஸ்; அதிர்ச்சியில் நாராயணசாமி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. என்.டி.ஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டதுடன், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., ல.ஜ.க கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் காங்கிரஸ் – தி.மு.கவில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

இன்று காலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போதே, `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது” என்று தன்னுடைய முகநூலில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சங்கர்.

எம்.பி வைத்திலிங்கம் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

எம்.பி வைத்திலிங்கம் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அதையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து அவர்களுக்கு `ஏ’ மற்றும் `பி’ படிவங்களை வழங்கினார், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அதேசமயம் அந்தப் படிவம் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு வழங்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சி தயார் செய்திருந்த வேட்பாளர் பட்டியலிலும் நாராயணசாமியின் பெயர் இல்லை. அதையடுத்து, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் பரவியது. அதில் கோபமடைந்த நாராயணசாமியின் ஆதரவாளர்கள், வைத்திலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்டனர்.

Source link