கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன்.
ஆனால், பொம்மை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!
எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன்.
