உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வேப்பனூத்து கிராம நிர்வாக அலுவலர்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வேப்பனூத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா 55 என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வேப்பனூத்து கிராம நிர்வாக அலுவலராக சுப்பையா 55, பணிபுரிந்து வருகிறார். இவர் முத்தையம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் 45, என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத முத்துராமன் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களது வழிகாட்டுதல் படி பகல் 1.30 மணியளவில் உசிலம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலத்தில் வைத்து சுப்பையாவிடம் லஞ்சம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link