வாஷிங்டன்: ஈரான் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதுநடத்தப்பட இருந்த அனைத்து ராணுவ

வாஷிங்டன்: ஈரான் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதுநடத்தப்பட இருந்த அனைத்து ராணுவ தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன், என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கா , இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டுநாட்களுக்குள் முழுமையாக திறக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கெடு விதித்து இருந்தார்.

இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் மோதலுக்கு முழுமையான மற்றும் நிரந்தரமான தீர்வு காண்பது குறித்து கடந்த இரண்டு நாட்களாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்த வாரம் முழுவதும் விரிவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால், ஈரான் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட இருந்த அனைத்து ராணுவ தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

தற்போது நடக்கும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் முடிவுகளின் அடிப்படையில் தாக்குதல் நிறுத்த முடிவு அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link