சென்னை: தமிழக மக்கள் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் கூட்டணி 210

சென்னை: தமிழக மக்கள் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறி உள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி;

பாஜ கூட்டணி 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பெரும்பான்மையை பெற்றது. ஆனால் 2024ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையை அவர்களால் பெற முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் தான் அவர்கள் ஆட்சியை அமைத்தனர்.இப்போது அவர்களின் செல்வாக்கு சரிந்த வருகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியானது மக்களின் நம்பிக்கை பெற்று இருக்கிறது. வரக்கூடிய 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி 210க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற போகிறோம்.

தமிழகத்தில் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோற்க போகிறது.

இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.

Source link