டபுள் குக், பெண் நடுவர், மிஸ் ஆகாத தாமு, சின்ன பொண்ணு, மகாலிங்கம்.. குக்கு வித் கோமாளி சீசன் 7 ரெடி! | chef dhamu female judge cooku with comali season 7 updates

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக்கு வித் கோமாளி 7வது சீசனின் புரொமோ வந்து விட்டது.

இந்தச் சீசன் தொடர்பாக கடந்த சில தினங்களாகச் சில தகவல்கள் கசிந்து வந்தன..

அதாவது செஃப் தாமு இந்தச் சீசனில் இல்லை என்றார்கள். முதலில் உடல்நிலையைக் காரணம் காட்டி, அவர் கலந்து கொள்ளத் தயக்கம் காட்டுவதாகவும் அப்படி வந்தால் கூட அவ்வப்போது ஸ்பெஷல் என்ட்ரியாக மட்டும் வந்து போவார் என்றும் பேச்சுகள் அடிபட்டன.

மேலும் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு அவருக்குப் பதில் வந்த மாதம்பட்டி ரங்கராஜும் இந்தச் சீசனில் ஆப்சென்ட் என்றும் சிலர் சொன்னார்கள்.

சமீபமாகத் தொடர்ச்சியாக குடும்பப் பிரச்னையில் அவரது பெயர் செய்திகளில் அடிபட்டு வருவதால் அவருக்குப் பதில் வேறு ஜட்ஜ்தான் வருவார் என்றனர்.

ஆனால் தற்போது நாம் விசாரித்ததில் தாமு, ரங்கராஜ் இருவருமே இந்தச் சீசனிலும் தொடர்கின்றனர். இவர்களைத் தவிர கடந்த சீசனில் வந்த கௌசிக்கும் இருக்கிறாராம்.

நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு

நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு

தவிர கூடுதலாக இந்தச் சீசனில் பெண் நடுவர் ஒருவரும் புதிய நடுவராக வரவிருக்கிறார்.

மேலும் இந்தச் சீசனில் குக்குகள் ஜோடிகளாக வரவுள்ளனர்.

அதாவது ரியல் கணவன் மனைவிகளே குக்குகளாக வரவிருக்கிறார்கள்.

இதற்காக டிவியில் கணவன் மனைவியாக இருப்பவர்களை வலைவீசிப் பேசி வருகிறது சேனல்.

தற்போது வரை சூப்பர் சிங்கர் மகாலிங்கம் மற்றும் நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணு ஆகியோருடன் சில‌ சீரியல் தம்பதிகளுட‌னும் பேசியிருப்பதாகத் தெரிய வருகிறது.

இவர்களில் யார் யாரெல்லாம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்து விடும்.

Source link