சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலாளிகளும் குற்றவாளிகள்தான்!”- நீதிமன்றம் தீர்ப்பு| Sathankulam father–son murder case; court delivers verdict.

* உயிரிழந்த ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை.

* கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர்.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை

உயர்நீதிமன்றம் மதுரை கிளை

* மரணங்களை விளைவிக்கக்கூடிய வகையில் அந்த காயங்கள் இருந்தது.

* கைகளை கயிற்றால் கட்டி தொங்க விட்டு தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. மேசையில் படுக்க வைத்தும் தாக்கியுள்ளனர்.

* ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால்தான் காவலர்கள் அடித்துள்ளனர்.

* நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா- மகன் கிடைத்துள்ளனர் என, போலீஸார் பேசிக் கொண்டனர்.

” என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலாளிகளும் குற்றவாளிகள்தான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 9 பேருக்கும் வரும் மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Source link