காரைக்குடி; காரைக்குடியில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தி.மு.க., காங்., நா.த.க., நிர்வாகிகள் மோதிக்

காரைக்குடி; காரைக்குடியில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தி.மு.க., காங்., நா.த.க., நிர்வாகிகள் மோதிக் கொண்டனர். இதில் சேர்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

காரைக்குடியில் உள்ள மகர் நோன்பு திடலில் தனியார் தொலைக்காட்சி சார்பில் தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் வேங்கை மாறன், அதிமுக சார்பில் திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ உமாதேவன், நாம் தமிழர் சார்பில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அதிமுக மற்றும் திமுகவினர் காரைக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் தங்களது கட்சி செய்த சாதனைகளை குறித்து பேசினார். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பேசும்போது மாங்குடி எம்எல்ஏ 15க்கும் மேற்பட்ட தனியார் பார் எடுப்பதில் ஆர்வம் காட்டியதோடு சரி மற்ற எந்த பணிகளும் செய்யவில்லை என்று பேசியதால் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்த பிளாஸ்டிக் சேர்களை எடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நோக்கி எறிந்தனர். தொடர்ந்து திமுக காங்கிரஸ் நாம் தமிழர் கட்சியினர் இடையே அடிதடி ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சி இளைஞரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link