லஜக நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சொத்து மதிப்பு என்ன?

லாட்டரி அதிபர் மார்டின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சி தலைவராக உள்ளார். அவர் என்டிஏ கூட்டணியில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு முழு விவரம்: ஜோஸ் சார்லஸ் மார்டின் கையிருப்பாக ரூ.20.59 லட்சமும் அவரது மனைவி சிந்து ஸ்ரீசார்லஸிடம் ரூ.1.82 லட்சமும் உள்ளது. கார்களில் ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரும், ரூ.1.29 கோடியிலான டொயோட்டோ வெல்பயர் கார் ஆகியவை உள்ளன.

ஜோஸ் சார்லஸிடம் ரூ.25.67 கோடி மதிப்பிலான 17 ஆயிரத்து 525 கிராம் தங்கமும், ரூ. 44.87 கோடி மதிப்பிலான 1950.353 கேரட் வைரங்களும், ரூ. 3.77 கோடியிலான 134.98 கிலோ வெள்ளியும், ரூ.38. 53 கோடி வாட்சுகளும், ரூ.1.57 லட்சம் முத்துகளும் உள்ளன. மேலும் டிடிஎஸ் உரிமைக் கோரலில் ரூ. 1.95 கோடி வந்துள்ளன. அவரது மனைவியிடம் ரூ.5.35 கோடி மதிப்பிலான 3655 கிராம் தங்கமும், ரூ. 2.10 கோடி மதிப்பிலான 485.5 கேரட் வைரங்களும், ரூ. 1.68 கோடி மதிப்பிலான 60 கிலோ வெள்ளியும், ரூ.1.14 கோடி வாட்சுகளும் உள்ளன.

Source link