ஈரானின் முன்னணி தலைவருடன் பேச்சுவார்த்தை: யாரை சொல்கிறார் டிரம்ப்

புளோரிடா: ஈரான் அரசின் முன்னணி தலைவருடன் பேசி வருவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அவரது பெயரை கூற மறுத்துவிட்டார்.

ஈரானுக்கு எதிராக போர் அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 4வது வாரத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இன்று டிரம்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது நடத்தப்பட இருந்த தாக்குதல் நிறுத்திவைப்பதாக கூறியிருந்தார்.ஆனால், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என ஈரான் அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: ஈரானின் முன்னணி தலைவருடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், அது ஈரானின் ஆட்சியாளரான மொஜ்தபா கமேனியுடன் நடத்தப்படவில்லை. அரசின் முன்னணி தலைவருடன் நடக்கிறது.

ஈரானின் முதற்கட்ட, இரண்டாம் கட்டம் மற்றும் முக்கிய தலைவர்களை கொன்றுவிட்டோம். தற்போது, மிகவும் மதிக்கக்கூடிய தலைவருடன் நாங்கள் பேசி வருகிறோம். இது கடினமாக இருக்கும் எனத் தெரிவித்த டிரம்ப், யாருடன் பேசுகிறோம் என்பதை கூற மறுத்துவிட்டார். மொஜ்தபா கமேனியுடன் பேசவில்லை. அவரது அறிக்கையை டிவியில் பார்க்கலாம். ஆனால், அவர் உயிருடன் உள்ளாரா என தெரியவில்லை. அவரை தலைவராக நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரேட் குஷ்னர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Source link