புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே, கடந்த நவம்பர் 10ல் வெடிகுண்டு நிரப்பிய காரை, டாக்டர் உமர் உன் நபி என்ற

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே, கடந்த நவம்பர் 10ல் வெடிகுண்டு நிரப்பிய காரை, டாக்டர் உமர் உன் நபி என்ற தற்கொலை படை பயங்கரவாதி வெடிக்க செய்ததில், 13 பேர் கொல்லப்ப ட்டனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஜம்மு – காஷ்மீரில் ஒன்பது இடங்களில் நேற்று ஒரே நாளில் சோதனை நடத்தினர். குப் வா ரா, பாரமுல்லா, ஸ்ரீநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒன்பது இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படு கிறது.

Source link