பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடத்தில் போட்டி

இதற்கிடையே, பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது 2 கட்டங்களாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு பாமக, அமமுக கூடுதல் தொகுதிகள் கேட்டதால், முடிவெடுக்க முடியாத நிலை நீடித்தது. பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், டிடிவி தினகரனும் சென்றார்.

பியூஷ் – ஜி.கே.வாசன் சந்திப்பு: இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார். அவரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். கிண்டியில் உள்ள ஓட்டலில் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அங்கு வந்து, மரியாதை நிமித்தமாக பியூஷ் கோயலை சந்தித்துவிட்டு சென்றார்.

நிர்வாகிகள் பேச்சுவார்த்தை: பின்னர், என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்களான பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், அன்புமணி, தினகரன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பழனிசாமி, பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி ஆகியோருடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Source link