ஆஸ்திரேலிய அணிக்கு கடின சவால்: 14 வாரத்தில் 10 டெஸ்ட்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டி அட்டவணை (2026-27) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி டிசம்பர் (2026) – மார்ச்சில் (2027), 14 வாரத்தில், 10 டெஸ்டில் (எதிர்: நியூசி., இந்தியா, இங்கி.,) பங்கேற்க உள்ளது.

சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியுடன் (ஆக. 2026) பயணத்தை துவக்குகிறது. 2027, மார்ச்சில் மெல்போர்னில் இங்கிலாந்துக்கு எதிரான 150வது டெஸ்ட் (பகலிரவு) கொண்டாட்டத்துடன் நிறைவு செய்கிறது.

நியூசிலாந்துக்கு எதிராக 4 வாரத்தில் 4 டெஸ்டில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 5 ‘டி-20’ல் கலந்து கொள்கிறது. அடுத்த ஆண்டு (ஜன-மார்ச்) இந்திய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் பைனலுக்கு தகுதி பெற்றால் விளையாடலாம். எட்டு மாதத்தில், 20 டெஸ்ட், 6 ஒருநாள், 5 ‘டி-20’ என 31 போட்டிகளில் விளையாடுகிறது ஆஸ்திரேலியா.

தொடர்ந்து போட்டிகள் இருப்பதால் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டார்க், ஹேசல்வுட், லியான் போன்ற சீனியர் வீரர்களுக்கு கடின சவால் காத்திருக்கிறது.

டெஸ்ட் அட்டவணை

ஆகஸ்ட்: 2 டெஸ்ட் (எதிர், வங்கம்)*

அக்டோபர்: 3 டெஸ்ட் (எதிர், தென் ஆப்ரிக்கா)

டிசம்பர் – ஜனவரி: நான்கு டெஸ்ட்(எதிர், நியூசி.,)*

ஜனவரி-மார்ச்: 5 டெஸ்ட் (எதிர், இந்தியா)

மார்ச் 11-15: 150வது டெஸ்ட்(எதிர், இங்கி.,)*

ஜூன்-ஆகஸ்ட்: 5 டெஸ்ட், (எதிர்: இங்கி.,)

* சொந்த மண்ணில் போட்டி. மற்றவை எதிரணி மண்ணில்

Source link