மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்.. மக்களவை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு | Parliament – Central Government Intensifies Efforts to Enact 33% Reservation for Women; Likelihood of Increase in Lok Sabha Constituencies

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தச் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டம் அமலானால் மக்களவை இடங்களின் மொத்த எண்ணிக்கை 543 லிருந்து 816 ஆக உயர வாய்ப்புள்ளது.

இதில் சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது மொத்த இடங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும்.

2023இல் நிறைவேற்றப்பட்ட பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பிறகே இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்தச் செயல்முறைகளை விரைந்து முடித்து, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வரவும் அரசு ஆலோசித்து வருகிறது. 2029 தேர்தலுக்கு முன்னதாகவே இந்த சட்டத்தை கொண்டு வர அரசு முனைப்பு காட்டி வருகிறது.

Source link