பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200 அதிகரிப்பு

இஸ்லாமாபாத்: கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பாகிஸ்தானில் உயர் ‘ஆக்டேன்’ பெட்ரோல் விலை, 200 பாக்., ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்காசிய போரால், பல நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அவற்றின் விலை, பல நாடுகளிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், உயர்தர ஆக்டேன் பெட்ரோலின் விலை, லிட்டருக்கு, 100 பாக்., ரூபாயில் இருந்து, 200 பாக்., ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டு, 300 பாக்., ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கார்களில் மட்டும் இந்த பெட்ரோல் பயன்படுத்தப் படுகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஏற்கனவே, பாகிஸ்தானில், பெட்ரோல் விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. லிட்டர் 266 பாக்., ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் 321 ஆக உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டர் 336 பாக்., ரூபாயாக உள்ளது.

Source link